சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து விருதுபெற்ற ஆசிரியை, மாணவிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து விருதுபெற்ற ஆசிரியை, மாணவிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைந்து 26ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 9 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கறம்பக்குடி ஒன்றியம் மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை க.ஜெயலெட்சுமி, ஆசிரியை ஷோபா, ஆய்வுக்குழு மாணவியர் ரா.சினேகா, ர.ரவித்ரா ஆகியோர் பசுமையான, ஆரோக்கியமான தேசத்திற்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் கருப்பொருளின் கீழ் மூலிகை நாப்கின் தயாரித்தல் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர்.
இந்த மூலிகை நாப்கினாது தற்போதைய சூழ்நிலையில் பெருகி வரும் கர்ப்பப்பை பிரச்னைகளை தீர்ப்பதற்கும், வேதிப்பொருள்கள் நிறைந்த நாப்கினால் ஏற்படும் சுகாதார கேடுகளை நீக்கிடவும் நாப்கின்களில் பயன்படுத்தப்படும் டயாக்ஸின் எனும் வேதிப்பொருள் உதவுவதாக கூறி செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வுக் கட்டுரை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றது. தொடர்ந்து, இக்குழுவினர் டிச.25 முதல் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள அகில இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். 
சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த ஆசிரியை மற்றும் மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா, கறம்பக்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com