டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் விடுதி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் விடுதி

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் விடுதி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டது. 
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் கூறியது: தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும்  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தெற்கு ராஜவீதியில் உள்ள தனியார் குடியிருப்பில் டெங்கு கொசு உருவாகுவதற்கான காரணிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் விடுதி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 42 வார்டுகளில் 1.70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களை நோய் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், வீடுகள் தோறும் லார்வா புழுக்கள் கண்டறியும் பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சுவரொட்டிகள் ஒட்டி லார்வா புழுக்கள் கண்டறிப்பட்ட விவரத்தை சுவரொட்டியில் பதிவு செய்வதுடன், தூய்மையாக உள்ள வீடுகள் குறித்தும் சுவரொட்டியில் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகவைத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது, மாநில தொற்று நோய் தடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.இந்துமதி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com