"நேருவின் வழியைப் பின்பற்றி மாணவர்கள் சிறந்தவர்களாக வர வேண்டும்'

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வழியைப் பின்பற்றி மாணவர்கள் சிறந்தவர்களாக வர வேண்டும் என்றார் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வழியைப் பின்பற்றி மாணவர்கள் சிறந்தவர்களாக வர வேண்டும் என்றார் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன்.
அன்னவாசல் ஒன்றியம், மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம், மின்னல் நட்சத்திரங்களின் மகிழ்வுப் பள்ளி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசியது: ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது கொண்ட பற்று காரணமாக அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சி அடைந்து உள்ளதற்கு அவர் தான் காரணம். எனவே குழந்தைகள் நன்றாகப் படித்து அவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார். குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதன்பின், ஊர்மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன், புதிதாக தொடங்க உள்ள மின்னும் நட்சத்திரங்களின் மழலையர் பள்ளியைப் பார்வையிட்டார்.
விழாவிற்கு அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னழகு தலைமை வகித்தார். அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் துரையரசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், ஆசிரிய பயிற்றுநர் முஜ்ஜமில்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னும் நட்சத்திரங்களின் மகிழ்வுப் பள்ளியை எழுத்தாளரும், கல்வியாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். 
பாராம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சியை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். 
மழலையர் வகுப்பு தொடக்க விழாவில் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  முன்னதாக, தலைமை ஆசிரியர் கிறிஸ்டி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சுஜாமெர்லின் நன்றி கூறினார். 
அதேபோல, விராலிமலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விவேகா மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com