விவசாயத்தை லாபகரமாக்க நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்

விவசாயத் தை லாபகரமாக மாற்ற நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.

விவசாயத் தை லாபகரமாக மாற்ற நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.
கறம்பக்குடி வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் திட்ட வளர்ச்சிப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் மேலும் கூறியது: தமிழக அரசு வேளாண் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் பல்வேறு வகையான மானியத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. 
கறம்பக்குடி வட்டாரம், மாங்கோட்டை கிராமத்தில் நீடித்த நிலையான மானாவரி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை சாகுபடி, தீத்தானிப்பட்டியில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ரூ.26,015 மதிப்பில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள நெல் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், மழையூரில் நீடித்த நிலையான மானாவரி மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டை, பல்லவராயன்பத்தையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி பரப்பு, திருமணஞ்சேரியில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 
விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் விவசாயத்தை லாபகரமாக மாற்றும் வகையில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக வருவாய் ஈட்ட  முடியும். இதற்காக, தாங்களது பகுதிகளிலுள்ள வேளாண் அலுவலர்களை அணுக வேண்டும் என்றார் ஆட்சியர் சு.கணேஷ். 
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் மனோகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com