கந்தர்வகோட்டையில் வீணாகும் அரிசி, நெல் மூட்டைகள்

கஜா புயலின் சீற்றத்தால் மேற்கூரை பெயர்ந்து போன புதுப்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள நெல், அரிசி

கஜா புயலின் சீற்றத்தால் மேற்கூரை பெயர்ந்து போன புதுப்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள நெல், அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன.
     கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கிருந்து, ஒன்றியப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவை இப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கஜா புயலால் கிடங்கின் மேற்கூரை பெயர்ந்து போனது. இதனால், புயல் சீற்றத்தின் போது, பெய்த மழைநீர் கிடங்கு முழுவதும் நிரம்பி அங்குள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகள், 600 டன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மழைநீரில் நனைந்து நாசமாகி வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com