புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட  பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட  பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 187-இல் மின்பாதைகளில் 170 பாதைகள் சேதமடைந்துள்ளன. சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்சாரத் துறையின் முதன்மை பொறியாளர் தலைமையில் விருதுநகர், கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 560 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி , மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சி, கரூர், திருவள்ளூவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் 200 பேர் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். சீரமைப்புப் பணியில், மரம் அறுக்கும் இயந்திரம் 50-ம்,  ஜெனரேட்டர் 50-ம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 28 பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புயலால் சேதமடைந்த ஓட்டு வீடு, கூரை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4100-ம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com