புதுக்கோட்டை

மீட்பு பணி: விராலிமலை, அன்னவாசலில் அமைச்சர் ஆய்வு

DIN


விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
கஜா புயலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதப் பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் பெருமாநாடு, புல்வயல், வயலோகம், மேலபழுவஞ்சி, கிளிக்குடி, கதவம்பட்டி, தளிஞ்சி, எண்ணை, மெய்யக்கவுண்டம்பட்டி, குடுமியான்மலை, இலுப்பூர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மரங்கள், வீடுகள், பயிர்கள் போன்ற பல்வேறு சேதபாதிப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ள காரணத்தினால் ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மினி குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து சேத விபரங்களும் முழுவதுமாக கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தும் வகையில் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து பகுதிகளும் கஜா புயல் பாதிப்பில் இருந்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT