விரைவான சீரமைப்புப் பணி: அமைச்சர் அறிவுறுத்தல்

ஊராட்சி பகுதிகளில் முற்றிலும் சேதமடைந்த பகுதிகளைக் கண்டறிந்து விரைவான சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

ஊராட்சி பகுதிகளில் முற்றிலும் சேதமடைந்த பகுதிகளைக் கண்டறிந்து விரைவான சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர். 
அன்னவாசல் மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மேலும் பேசியது:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 3,470 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளைச் 
சேர்ந்த 412 குக்கிராமங்களுக்கு 26 ஜெனரேட்டர், 2 லாரி, 16 டிராக்டர் வாகனங்கள் மற்றும் 20 டாடா ஏஸ் வாகனங்கள் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்கம்பங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டும் கூடுதலாக ஜே.சி.பி வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2,750 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். 35 லாரி, 25 டாடா ஏஸ், 73 ஜெனரேட்டர் ஆகியவற்றின் உதவியுடன் 45 
ஊராட்சிகளைச் சேர்ந்த 463 குக்கிராமங்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 45 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 23 குக்கிராமங்களுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளைக் கண்டறிந்து 
சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் செயலர்கள்தான் தகவல் தெரிவிக்க வேண்டும். சீரமைப்பு பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. ஓரிரு நாளில் அன்னவாசல் மற்றும் விராலிமலை பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் விரைந்து சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com