திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

அங்கன்வாடி மையத்திற்கு உதவி

DIN | Published: 11th September 2018 08:47 AM

பொன்னமராவதி அருகே உள்ள முருக்கபட்டி அங்கன்வாடி மையத்திற்கு சிட்டி அரிமா சங்கம் சார்பில் சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு, சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜெ.பிரவின்குமார் தலைமை வகித்தார். நிகழ்வில், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. 
மேலும், மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
மாவட்டத் தலைவர் த.பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சந்திரன், செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
 

More from the section


மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கி  பெண் சாவு

படிப்பறிவு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு போட்டி
வாக்காளர் பட்டியல்: அறந்தாங்கியில் 1552 மனுக்கள்
அறந்தாங்கியில் கருணாநிதி கவிதை அரங்கம்