செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

DIN | Published: 11th September 2018 08:49 AM

விராலிமலை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேரை விராலிமலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கல்குடி மற்றும் கோமங்கலம் பகுதிகளில் அனுமதியின்றி கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  விராலிமலை காவல் துணை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது கோமங்கலத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பெருமாள்(55) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெக்கையன் மகன் குமார் (46) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதைக் கண்ட போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். 
இதேபோல் கல்குடியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ஐயப்பன் (43) என்பவர் அவரது வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பதைக் கண்டறிந்த போலீஸார் அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடம் இருந்து தலா 5 பாட்டில்கள் வீதம் மொத்தம் 15  மதுபாட்டில்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

More from the section

அறந்தாங்கியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
அன்னவாசலில் செப்டம்பர் 26 மின் நிறுத்தம்
மாவட்டத்தில் விலையில்லா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.5.83 கோடி நிதி ஒதுக்கீடு
திருவரங்குளத்தில்  விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்