புதன்கிழமை 14 நவம்பர் 2018

அரசுப் பள்ளிக்கு இருக்கைகள் அளிப்பு

DIN | Published: 11th September 2018 08:48 AM

அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே  ஏனங்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வர்ணம் தீட்டும் பணி, டைல்ஸ் பதிக்கும் பணி, கழிவறை அமைத்தல் மற்றும் வேலி அமைத்து புனரமைத்தனர். இதன் விளைவாக, கடந்த ஆண்டு கூடுதலாக 17 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து,  மாணவர்கள், ஆசிரியர்கள் அமர இருக்கைகள், நாற்காலிகள் மற்றும் தேவையான பல்வேறு வகையான பொருள்களை வாங்கி அவற்றை புதுகை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வசம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில், அரிமளம் வட்டாரக் கல்வி அலுவலர் இரா. திருப்பதி, கூடுதல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஜா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து  கொண்டனர். 
 

More from the section

சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து விருது பெற்றவர்களுக்கு பாராட்டு


டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் விடுதி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அரோகரா கோஷத்துடன் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா