வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

கல்லூரியில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் தொடக்கம்

DIN | Published: 11th September 2018 08:50 AM

இராஜேந்திரபுரம் நைனாமுகம்மது கலை அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி முகாம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலை. நாட்டுநலப் பணித்திட்டம், கல்லூரி இணைந்து நடத்திய முகாமிற்கு கல்லூரித் தாளாளர் நை.முகமது பாரூக் தலைமை  உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஏ.பி. குருமூர்த்தி மாணவர்களுக்கு போட்டித் தேர்வின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். 
கல்லூரி முதல்வர் செ. ராபர்ட்  அலெக்ஸாண்டர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், தமிழ்த்துறை பேராசிரியர் பி. கஸ்தூரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, போட்டித் தேர்வு ஒருங்கிணைப்பாளர் வில்லியம் வரவேற்றார். நிறைவில், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. காயத்திரி நன்றி கூறினார்.

More from the section

மழையால் சீரமைப்புப் பணிகள் சுணக்கம்
ஏடிஎம்-இல் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு
விரைவான சீரமைப்புப் பணி: அமைச்சர் அறிவுறுத்தல்
5-ஆவது நாளாக மின்சாரம், குடிநீரின்றி மக்கள் அவதி:  செம்பட்டிவிடுதியில் சாலை மறியல்
அறந்தாங்கியில் மின் விநியோகத்தை சீரமைக்கக்கோரி மறியல்