23 செப்டம்பர் 2018

திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

DIN | Published: 11th September 2018 08:48 AM

சேலம் சோனா கல்விக் குழுமம் சார்பில் பொன்னமராவதியில் சோனா யுக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. .
சேலம் சோனா கல்விக் குழுமத்தின் சார்பில் கடந்த 2012 முதல் சோனா யுக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் நலிவடைந்த பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.  தற்போது, புதுகை மாவட்டம், பொன்னமராவதியில் 51 ஆவது திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. மையத்தை தலைமை நிர்வாக அதிகாரி சொக்கு வள்ளியப்பா, முதன்மை செயல் அலுவலர் முரளிதர் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  விழாவில், முன்னாள் நீதிபதி செல்வம், இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் அகிலேஷ், பழனியப்பா செட்டியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்விக் குழுமத் தலைவர் வள்ளியப்பா முன்னிலை வகித்தார். இறுதியில், நன்றியுரையாற்றினார்.

More from the section

பகிரப்படாத பிரச்னைகள் மன உளைச்சலை அதிகரிக்கும்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிரசார இயக்கம்
அரசு பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரசாரம்
மணல் கடத்திய 2 மாட்டுவண்டிகள், டிப்பர் லாரி பறிமுதல்
அறந்தாங்கி அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி சாவு