புதன்கிழமை 21 நவம்பர் 2018

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN | Published: 11th September 2018 08:48 AM

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 350 கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து
விலையில்லா வீட்டுமனைப் பட்டா,  பட்டா மாறுதல்,  குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், பசுமை வீடு,  சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 350 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
     மேலும், புதுக்கோட்டை நகர நிலவரித் திட்டத்தின்  சார்பில் 13 பேருக்கு  வீட்டு மனைப் பட்டாக்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு  தலா ரூ.5 ஆயிரம்  மதிப்புள்ள சலவைப்பெட்டிகளும் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சேர்ந்து பயிற்சி பெற்று 2018-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப்  4-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் ,சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ், வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

மழையால் சீரமைப்புப் பணிகள் சுணக்கம்
ஏடிஎம்-இல் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு
விரைவான சீரமைப்புப் பணி: அமைச்சர் அறிவுறுத்தல்
5-ஆவது நாளாக மின்சாரம், குடிநீரின்றி மக்கள் அவதி:  செம்பட்டிவிடுதியில் சாலை மறியல்
அறந்தாங்கியில் மின் விநியோகத்தை சீரமைக்கக்கோரி மறியல்