புதன்கிழமை 21 நவம்பர் 2018

வீட்டுமனைப் பிரிவு வரன்முறை சிறப்பு முகாம்

DIN | Published: 11th September 2018 08:49 AM

புதுக்கோட்டையில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும்  சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு தலைமை வகித்து ஆட்சியர் சு. கணேஷ் பேசியது: புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் 20.10.2016-க்கு முன்பாக தாங்கள் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் தனி மனையாகவோ, மனைப் பிரிவாகவோ வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனைகளை வரன் முறைபடுத்த வேண்டி 124 மனுக்கள் வரப்பெற்றது. மேலும், இம்முகாமில் 50  பேர்களுக்கு மனை வரன் முறைபடுத்திய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனைகளை வரன் முறைபடுத்த வேண்டிய உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை 3.11.2018- க்குள் நகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.முகாமில்,  சிவகங்கை மண்டல நகர்,  ஊரமைப்பு துணை இயக்குநர் இரா.காவியம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

மழையால் சீரமைப்புப் பணிகள் சுணக்கம்
ஏடிஎம்-இல் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு
விரைவான சீரமைப்புப் பணி: அமைச்சர் அறிவுறுத்தல்
5-ஆவது நாளாக மின்சாரம், குடிநீரின்றி மக்கள் அவதி:  செம்பட்டிவிடுதியில் சாலை மறியல்
அறந்தாங்கியில் மின் விநியோகத்தை சீரமைக்கக்கோரி மறியல்