செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

அனுமதியின்றி மதுவிற்ற 3 பேர் கைது

DIN | Published: 12th September 2018 07:45 AM

விராலிமலை அருகே அரசு அனுமதியின்றி மதுவை விற்ற 3 பேரை விராலிமலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள புதுப்பாட்டி பிரிவு, அருண் கார்டன் பகுதிகளில் அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் காவல் துணை ஆய்வாளர் சுமையாபானு தலைமையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருண் கார்டன் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பூர் மேலபட்டியைச் சேர்ந்த மலையாண்டி மகன் முருகேசன்(35), விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே தேநீர் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சுப்பையா மகன் சண்முகம் (53), புதுபட்டி பிரிவில் வீட்டில் மதுவைப் பதுக்கி விற்ற பூமாலை மகன் சுப்பிரமணி(57) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

More from the section

6 லட்சம் தென்னை, 35 ஆயிரம் பலா மரங்கள் சேதம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சேதமடைந்த அரசுப் பள்ளி கட்டடம்
கஜா புயலால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண் சாவு
மின்சாரம் கேட்டு அறந்தாங்கியில் மறியல்
அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் மறியல்