புதன்கிழமை 14 நவம்பர் 2018

வாகனம் மோதி மதுரையைச் சேர்ந்தவர் சாவு

DIN | Published: 12th September 2018 07:48 AM

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரையைச் சேர்ந்த வர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் மகன் முகமது ஜியாவுதின் (40). தொழிலாளியான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் டெம்போ வேனில் சென்னை, நாகை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில், விராலிமலை - மதுரை தேசிய நெடுசாலை மாதிரிபட்டி பிரிவு அருகே தேநீர் குடிப்பதற்காக வேனை எதிர்ப்புறம் நிறுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் வேனுக்கு திரும்பிச் செல்ல  சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் முகமது ஜியாவுதின் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. 
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

அரோகரா கோஷத்துடன் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து விருது பெற்றவர்களுக்கு பாராட்டு


டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் விடுதி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ரணகாளிமுத்தம்மன் கோயில் சுவாமி ஊர்வலம்
கறம்பக்குடியில் அரசுப்பள்ளி மாணவர்கள் தர்னா