ஆர்.சி. புத்தகம் வழங்காததைக் கண்டித்து வாகனத்தை நிறுத்திச் சென்ற ஆசிரியர்

கடந்த 5 மாதங்களாக வாகன ஆர்.சி. புத்தகத்தை வழங்காததைக் கண்டித்துஅறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில்

கடந்த 5 மாதங்களாக வாகன ஆர்.சி. புத்தகத்தை வழங்காததைக் கண்டித்துஅறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் புதன்கிழமை பைக்கை நிறுத்திச் சென்ற ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலைச் சேர்ந்தவர் செல்வராஜ், ஆசிரியர். கடந்த ஜனவரி மாதம் ஆவுடையார்கோவிலில் உள்ள தனியார் விற்பனை மையத்தில்  இருசக்கர வாகனம் வாங்கிய இவர்,  மார்ச் மாதத்தில் அந்த மையம் மூலமாக ஆர்.சி. புத்தகம் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் கடந்த  5 மாதமாக  ஆர்.சி. புத்தகம் கேட்டு  தனியார் மையத்துக்கு அலைந்தும்  ஆர்.டி.ஓ. அலுவலகத்திலிருந்து புத்தகம் வந்தததும் தருகிறோம் எனக்  கூறியுள்ளனர். இதனால் புதன்கிழமை மாலை அறந்தாங்கியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த செல்வராஜ்,   அங்கு அலுவலர் இல்லாததால்  வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு  ஆர்.சி. புத்தகம் வந்ததும் வண்டியை எடுத்துக் கொள்கிறேன்  எனக் கூறிச் சென்றுவிட்டார்.  பின்னர் அலுவலகத்தில் உள்ளவர்கள் அவரைத் தொடர்பு கொண்டு  மறுநாள் வந்து ஆர்.சி. புத்தகத்தை வாங்கிச் செல்லுங்கள் எனக் கூறினராம். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,  அந்த நபரின் விண்ணப்பத்தில்  சில விவரங்கள் இல்லை. சில இடங்களில் அவரின் கையெழுத்து இல்லை. அவர் அலுவலகத்துக்கு நேராக வந்து கேட்டிருந்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு  உடன் புத்தகம் வழங்கப்பட்டிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com