மாத்தூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.56 கோடியில் உதவி

அன்னவாசல் அருகேயுள்ள மாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்

அன்னவாசல் அருகேயுள்ள மாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் 1,018 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
தமிழக  அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை கிராமங்கள்தோறும் நேரடியாகச் சென்று தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்துகிறது. அதனடிப்படையில் மாத்தூர் கிராமத்தில் முகாம் நடக்கிறது.
இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.  
மேலும் அரசுத் துறைகள் மூலம் இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகள் பயனுள்ளதாக உள்ளன.   தமிழக அரசால் திருமண உதவி, தாலிக்குத் தங்கம் வழங்கப்படுகிறது.  மாவட்டத்தில் 41,000 அதிகமானோர் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் சிறு,குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.  இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,018 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, வேளாண் இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) செல்வராஜ், வட்டாட்சியர் கபரியேல்சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com