பொன்னமராவதியில் ராயல் அரிமா அரிமா சங்கம் சார்பில் அரிமா சங்க ஆளுநரின் சிறப்பு திட்டமான அறிவை விரிவு செய் திட்டத்தின் வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் திட்டத்தின் கீழ் சங்க உறுப்பினர்கள் இல்லத்தில் நூலகம் திறக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிஎல். மாணிக்கவேல், செயலர் ஆர். மணிகண்டன் உள்ளிட்டோர் இல்ல நூலகத்தை சங்கத்தலைவர் என். பழனியப்பன் திறந்துவைத்தார். வட்டாரத் தலைவர் செ. பாலமுரளி, பிஎல். ராமஜெயம் ஆகியோர் வாழ்த்தினர். சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.