மாவட்டத்தில் விலையில்லா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.5.83 கோடி நிதி ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் விலையில்லா இருசக்கர வாகனம் வழங்குவதற்காக ரூ.5.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் விலையில்லா இருசக்கர வாகனம் வழங்குவதற்காக ரூ.5.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற விதவை, ஏழை மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை  வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில்  வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தை பொருத்தவரை 6,114 மகளிர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2,334 பேர் அம்மா இருசக்கர வாகனம் பெற தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழாண்டில் மாவட்டத்திற்கு 2,334 இரு சக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  முதல்கட்டமாக 2 திருநங்கைகள் உட்பட 123 மகளிருக்கு ரூ.30.75 லட்சம் மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள்  வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 100 பேருக்கு ரூ.2.50 கோடி மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் நிகழாண்டில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்குவதற்காக ரூ.5.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் விரைவில் வழங்கப்படும். மேலும் அம்மா இருசக்கர வாகனம் கேட்டு விண்ணப்பிக்கும் தகுதியுடைய அனைத்து மகளிருக்கும் இருசக்கர வாகனம் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com