புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயிலில் விடையாற்றி திருவிழா

DIN

கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் விடையாற்றி திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 
கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கந்தர்வகோட்டையில் விடையாற்றி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
அதேபோல, நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், திரவியம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர் அபிஷேகங்கள், மதியம் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்கள், பொதுமக்களுக்கு அருள்புரிந்தார். கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை நகர வாணியச் செட்டியார்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT