மெய்க்குடிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள  ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் சுவாமி கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள  ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் சுவாமி கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில் சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கிடாவெட்டு பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூ போடுதலுடன் துவங்கி திங்கள்குழமை பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் அபிஷேகங்கள் நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்று பக்தர்கள் கிடாவெட்டி பூஜை செய்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை மெய்க்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com