அறந்தாங்கியில் நாளை கோட்டை சிவன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி கோட்டை அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி கோட்டை அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான கோட்டை விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கற்றளி கோயிலாகக் கட்டப்பட்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு தெ.மா.தெட்சிணாமூர்த்தி தலைவராகவும், சிவ. மு.சதாசிவம் செயலாளராகவும், சிவ.ரெ.அமரகெங்கன் பொருளாளராகவும், கற்பகா அய்யாக்கண்ணு, எஸ்.வெங்கட்ரமணி அய்யர், வின்சென்ட் ராஜேந்திரன், சி.கிருஷ்ணமூர்த்தி அய்யர் உள்ளிட்ட பல சிவத்தொண்டர்கள் முயற்சியால் புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  
இதை முன்னிட்டு, சிங்கப்பூர் சிவஸ்ரீ. என்.பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை முதற்கால யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை 2 மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை 4 மற்றும் 5 ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 6 ஆவது யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 7. 50 மணிமுதல் 8.10 மணிக்குள் விமானம் கும்பாபிஷேகம், மூலஸ்தான அபிஷேகம்  நடைபெறுகிறது.  பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 
விழா ஏற்பாடுகளை அருள்மிகு  விசாலாட்சி உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சிவத் தொண்டர்கள்  செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com