"தமிழையும் பண்பாட்டையும் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை'

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றார் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி.

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றார் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து வியாழக்கிழமை நடத்திய தாய்மொழிகள் தின விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது
இந்தியாவில் தாய்மொழியின் அவசியத்தை முதலில் முன்வைத்தவர் காந்தியடிகள். சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே மொழிப்பற்றையும்  அவர் முன்வைத்துப் பேசினார். ஆங்கில மோகத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மொழியின் மீதும் மிகுந்த பற்றை அவர் கொண்டிருந்தார்.
காந்தியடிகளின் சுயசரிதை நூல் அவரது தாய்மொழியான குஜராத்தியில் எழுதப்பட்டது. தாகூரின் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி அவரின் தாய்மொழியான வங்க மொழியில் எழுதப்பட்டது. மொழியைப் பாதுகாத்தால்தான் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும். 
அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட 25 மொழிகள் அழியும் என்று யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது. 
அந்தப் பட்டியலில் தமிழ் 8ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய நிலையே தொடர்ந்தால் அடுத்த 50 ஆண்டுகளாக அந்தக் கணக்கு சுருங்கிவிடலாம். எனவே, மொழியைப் பாதுகாப்பதும், பண்பாட்டைப் பாதுகாப்பதம் தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றார் கிருஷ்ணமூர்த்தி.
கல்லூரி முதல்வர் (பொ) பொன். ராஜரத்தினம் தலைமை வகித்தார். வாசகர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சா. விஸ்வநாதன் அறிமுகவுரை நிகழ்த்தினார். முன்னதாக, பேராசிரியர் சபரிதாசன் வரவேற்றார். நிறைவில் வி. முருகையன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com