ஜன. 19இல் பொது விநியோக திட்ட  குறைகேட்பு முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஜன. 19ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஜன. 19ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை வட்டத்தில் கவிநாடு, ஆலங்குடி வட்டத்தில் முத்துப்பட்டிணம், திருமயம் வட்டத்தில் மல்லாங்குடி, குளத்தூர் வட்டத்தில் கண்ணாங்குடி, இலுப்பூர் வட்டத்தில் பாக்குடி, கந்தர்வக்கோட்டை வட்டத்தில் அரியாணிப்பட்டி, அறந்தாங்கி வட்டத்தில் நெய்வேலிநாதபுரம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் தக்கடிவயல், மணமேல்குடி வட்டத்தில் பேட்டிவயல், பொன்னமராவதி வட்டத்தில் வாழக்குறிச்சி, கறம்பக்குடி வட்டத்தில் கல்லுமடை, விராலிமலை வட்டத்தில் செங்களாக்குடியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இதில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com