புதுக்கோட்டை

"கல்வியுடன் நற்பண்புகளையும் வளர்க்க வேண்டும்'

DIN

மாணவர்கள் கல்வியுடன் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் எழுத்தாளர் நந்தலாலா.
புதுக்கோட்டை லேணா விளக்கு பகுதியிலுள்ள மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 18ஆவது ஆண்டு விழாவில்  அவர் மேலும் பேசுகையில், எளிய குடும்பத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த  அப்துல்கலாம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பை மட்டுமின்றி நாட்டின் திசைவழி யைத் தீர்மானிக்கும்  இடத்துக்கே சென்ற படிக்காத மேதை காமராஜர், தொழுநோயாளியையும் தொட்டு கவனித்துக் கொண்ட  அன்னை தெரசா உள்ளிட்டோரை மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கல்லூரித்  தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் முன்னிலை  வகித்தார். முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குநர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபாரதன்  வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT