வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

 நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,538 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி

 நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,538 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,538 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக 1923 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3737 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1999 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகளும் வந்துள்ளன. இவற்றை எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி வழி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இப்பணியைக் கண்காணிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியது:  வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25 சதவிகிதம் கூடுதல் இருப்பாகவும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் 30 சதவிகிதம் கூடுதல் இருப்பாகவும் வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் சந்தேகங்களை அறியவும், புகார் தெரிவிக்கவும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களுக்கு இதுவரை 1303 அழைப்புகள் வந்து அவர்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆவணங்களுடன் கொண்டு வரப்படாத ரொக்கம் உள்ளிட்ட 17 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் உமாமகேஸ்வரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com