வல்லத்தில் புதை வடிகால் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சியில் ரூ. 34.51 கோடியில் புதை வடிகால் திட்டப் பணிகள் தொடக்க விழா வல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சியில் ரூ. 34.51 கோடியில் புதை வடிகால் திட்டப் பணிகள் தொடக்க விழா வல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற வேளாண்மை துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பூமிபூஜையை தொடங்கி வைத்ததுடன், பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.எம்பிக்கள் ஆர். வைத்திலிங்கம், கு. பரசுராமன் ஆகியோர் பேசினர். 
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சியின் பரப்பளவு 7.60 சதுர கி.மீட்டராகும். 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில் 2033 ஆம் ஆண்டு (22,800 பேர் ) மக்கள்தொகையை கருத்தில் கொண்டு ரூ. 34.51 கோடியில் புதை வடிகால் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அண்மையில் நிர்வாக அனுமதி அளித்தது.
இதன்படி, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 115 லிட்டர் என 2.35 மில்லியன் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பேரூராட்சியின் 15 வார்டுகளை உள்ளடக்கி, 235 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள தூண்டப்பட்ட சகதி முறை தொழில்நுட்பத்திலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய புதை வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி,  27,675 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர்க் குழாய்களும், 1056 ஆள்நுழைவுக் குழாய்களும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3787 வீட்டு இணைப்புகள் மூலம் 15,402 மக்கள் பயனடைவார்கள் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
முன்னதாக, விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் க. விஸ்வநாதன் வரவேற்றார்.  
வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிங்ஜெகதீசன் மற்றும் பலர் பங்கேற்றனர். நிறைவில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com