தஞ்சாவூர்

குடந்தையில் காவிரி ரதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

DIN


காவிரி நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தும் விழிப்புணர்வு ரதயாத்திரை குழுவுக்கு கும்பகோணத்தில் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகில பாரதிய துறவியர் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை கடந்த அக். 23ஆம் தேதி கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கி வரும் 15-ம் தேதி பூம்புகாரில் நிறைவடைய உள்ளது. இந்த ரதயாத்திரையில் காவிரி அன்னையின் சிலை அமைக்கப்பட்டு, அதற்கு ஆங்காங்கே பூஜைகளும் நடத்தப்படுகிறது.
காவிரி ஆறு ஓடும் கரையோரப் பகுதி ஊர்களில் உள்ள பொதுமக்களிடம், காவிரி ஆற்றினை பொதுமக்கள் மாசுபடுத்தக் கூடாது, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என ரதயாத்திரை குழுவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி, காவிரி அன்னை ரதத்துடன் வந்த அகில பாரதிய துறவியர்கள் சங்க தலைவர் ராமானந்தா சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா சுவாமிகள் உள்ளிட்டோருக்கு  கும்பகோணம் கொட்டையூர் புறவழிச்சாலையில் மாசிமக ஆரத்தி பெருவிழா மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை தலைவர் பி.கல்யாணசுந்தரம், செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.
பின்னர் ரதத்தில் உள்ள காவிரி அன்னைக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கும்பகோணம் பாலக்கரை   காவிரி படித்துறையில் அன்னை காவிரிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. அகில பாரதிய துறவியர்கள் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 நீர் நிலைகளை தூய்மையாக வைத்திருத்தல், பராமரித்து பாதுகாத்தல், நன்றி செலுத்தி வணங்குதல் ஆகியவை நமது கடமையாகும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக   8 வது ஆண்டாக காவிரி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. காவிரியில் தடுப்பணை கட்டாததால் பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க தமிழக அரசு, நீர் மேலாண்மைக்கு தனியாக அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசு நீர் ஆதாரத்தை பாதுகாக்க காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT