தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல்

DIN


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 11 பேர் டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராவூரணியைச் சேர்ந்த பாகம்பிரியாள் (30), தஞ்சாவூரைச் சேர்ந்த வைரத்தம்மாள் (70), ஒரத்தநாட்டைச் சேர்ந்த சரவணன் (30), திருவையாறைச் சேர்ந்த அருணாசலம் (17), திருவாரூரைச் சேர்ந்த தர்மராஜ் (26) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 26 பேர் பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல, கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி மகனும், பொறியாளருமான கலைச்செல்வன் (20), டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் குறிப்பாக, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 11 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 315 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஐ. ரவீந்திரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT