தமிழ்ப் பல்கலை.யில் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கத் திட்டம்: துணைவேந்தர் பேச்சு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்.
இப்பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகாதெமி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய புத்தக வார விழாவின் தொடக்க விழாவில் அவர் பேசியது:
சாகித்ய அகாதெமி என்ற பொதுத் துறை நிறுவனம் ஆண்டுக்கு ஏறத்தாழ 6,000-க்கும் அதிகமான நூல்களை 24 மொழிகளில் வெளியிட்டு வருகிறது. இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கும், தேசிய ஒற்றுமைக்கும் மிகப் பெரிய பங்காற்றி வரும் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு மூலமாக பிற மொழி நூல்களையும் வெளியிடுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது மொழிபெயர்ப்புத் துறையும், இந்திய மொழிகள் பள்ளியும் ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்த மலையாளம், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் - பிராகிருதம் ஆகிய 4 துறைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. பிற மொழிகளிலிருந்து நம் மொழிக்கும், நம் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் விதமாக மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலை தயாரிக்குமாறு கூறியுள்ளேன். மொழிபெயர்ப்பாளர்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மொழிபெயர்ப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் துணைவேந்தர்.
விழாவில் சாகித்ய 
அகாதெமி பொறுப்பு அலுவலர் டி.எஸ். சந்திரசேகர்ராஜ், பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர் இரா. முரளிதரன், நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா. காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நவ. 20 வரை  புத்தகக் கண்காட்சி
இந்த விழாவையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் சாகித்ய அகாதெமி சார்பில் புதன்கிழமை முதல் நவ. 20-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், சாகித்ய அகாதெமி 600 தலைப்புகளில் நூல்களை விற்பனைக்காக வைத்துள்ளது. இவற்றுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இக்கண்காட்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் 25 சதவீதத் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com