மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் வியாழக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மக்கள் நலன் கருதி 1948 மருந்தியல் சட்ட விதிப்படி துணைச் சுகாதார மையங்களில் தொற்றாநோய் தடுப்பு மருந்துகளைக் கையாள மருந்தாளுநரை நியமனம் செய்ய வேண்டும். தலைக்காயம், விபத்து அவசர சிசிக்சை பிரிவு மருந்தகங்கள் 24 மணிநேரம் இயங்கக் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி மருந்தாளுநரை நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ரவி தலைமை வகித்தார். மோட்டார் வாகன பணிமனை மற்றும் பராமரிப்பு ஊழியர் சங்க மாநிலச் செயலர் எஸ். கோதண்டபாணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ. ரெங்கசாமி, வடக்கு வட்டச் செயலர் எம். சுப்பிரமணி, தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்க மாவட்டச் செயலர் எஸ். சித்திரைச்செல்வன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தி. ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலர் கே. பாஸ்கரன், பொருளாளர் கே. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com