சேத கணக்கெடுப்புப் பணியில் வருவாய் அலுவலர்கள்

பட்டுக்கோட்டை வட்டத்தில் புயல் சேதங்களை கணக்கிடும் பணிக்கு 44 வருவாய்த்துறை அலுவலர்கள் சென்றுள்ளனர்.

பட்டுக்கோட்டை வட்டத்தில் புயல் சேதங்களை கணக்கிடும் பணிக்கு 44 வருவாய்த்துறை அலுவலர்கள் சென்றுள்ளனர்.
கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. இதனை கணக்கெடுக்கும் வகையில் வருவாய்த் துறை அலுவலர்களை கூடுதல் பணிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. 
அதன்பேரில், கும்பகோணம் வட்டத்தில் பணியாற்றும் 4 வருவாய் அலுவலர்கள் தலைமையில் தலா 10 கிராம நிர்வாக அலுவலர்கள் வீதம் 41 விஏஓக்கள் பட்டுக்கோட்டை வட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுள்ளனர்.
இது தவிர, புயல் பாதிப்பால் கும்பகோணம் வட்டத்தில் 40 வீடுகள் பகுதியாகவும், சோழன்மாளிகையில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நாச்சியார்கோவிலில் ஒரு ஆடு, வளையப்பேட்டையில் ஒரு மாடு இறந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாக வட்டாட்சியர் ஜானகிராமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com