தஞ்சாவூர்

நிவாரண அறிவிப்பை மீண்டும் பரிசீலிக்க வலியுறுத்தல்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்து தமிழக முதல்வரின் அறிவிப்பை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:
தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகக் கடுமையான ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகளை முழுச் சேதம், பகுதி சேதம் என பிரித்து பார்க்க இயலாது. ஒரு பகுதி சேதம் அடைந்தாலும் அதை முழுமையாகத்தான் சரி செய்ய வேண்டும் என்பதை அரசுக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புயுல் காரணமாக ஓட்டு வீடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து அரசின் நிலை என்ன? கான்கீரிட் வீடுகள் மீது மரங்கள் விழுந்து பாதிப்படைந்துள்ளது. அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் பெருமளவுக்குச் சேதமாகியுள்ளன. அவை குறித்து எவ்வித தெளிவும் முதல்வர் அறிவிப்பில் இல்லை.
நெல், கரும்பு, வாழை, காய்கறி, மலர்கள் என அனைத்துக்கும் ஹெக்டேருக்கு ரூ. 13,500 என அரசு அறிவித்திருப்பது முற்றிலும் போதுமானதல்ல. ஒவ்வொன்றின் உற்பத்தி செலவும் வேறுபடும் என்பதை அரசுக் கவனத்தில் கொள்ள வேண்டும். 
தென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் முற்றிலும் போதுமானதல்ல. எட்டுவழிச் சாலைக்கு அறிவிக்கப்பட்டது போல ஒரு மரத்துக்கு ரூ. 50,000 இழப்பு வழங்க வேண்டும். பலா, தேக்கு சவுக்கு போன்ற மரங்கள் மற்றும் மிளகு, வெற்றிலை போன்ற செடி, கொடிகள் பற்றிய இழப்பீடுகள் குறித்து அறிவிப்பில் இல்லாதது கவலைக்குரியது. மீனவர்கள் கடந்த இரு வார காலம் வேலை இன்றி இருப்பதுடன், தங்களது உடைமைகளான படகு, மீன் பிடி வலை மற்றும் கருவிகளை இழந்தும் பெரும் சேதத்துக்கு ஆளாகியுள்ளனர். 
அவர்களுக்கான நிவாரணம் போதுமானதல்ல என்பதுடன், பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள விவசாயத் தொழிலாளர்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பை ஈடு செய்து அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டியது அரசின் மிகப் பெரும் பொறுப்பும், கடமையுமாகும்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:
கடந்த 6 ஆண்டுகளாக சாகுபடி இல்லாமல் இருந்த விவசாயிகள் நிகழாண்டு மிகுந்த சிரமத்துக்கு இடையில் நெல் சாகுபடி செய்தனர். கதிர் விடும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து கிடக்கிறது. பல்லாயிரக்கணக்கான தென்னை, தேக்கு, வாழை, மா உள்ளிட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படவில்லை. தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிவாரணமும் திருப்திகரமாக இல்லை. தென்னைக்கு ரூ. 1,100 நிவாரணம் என அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. 
இதேபோல, அனைத்து பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் ஏற்புடையதல்ல. எனவே, தமிழக அரசு நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000-ம், கரும்பு வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சமும், தென்னைக்கு மரத்துக்கு ரூ. 20,000-ம், உயிரிழப்புக்கு ரூ. 25 லட்சமும், மா, பலா, தேக்குக்கு தலா ரூ. 15,000-ம் நிவாரணம் வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT