வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு 

DIN | Published: 11th September 2018 09:19 AM

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை நிகழ்த்திய பட்டுக்கோட்டை மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில்  கோஜீரியோ சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைப்பெற்றது. இதில், பட்டுக்கோட்டை  இஷின்ரீயூ கராத்தே பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 37 மாணவ, மாணவிகள் பயிற்சியாளர் சென்சி என்.நாடிமுத்து தலைமையில் சென்று கலந்து  கொண்டனர்.
இவர்கள், கட்டா பிரிவில் 10 முதல் பரிசும், 7 இரண்டாம் பரிசும் , 5 மூன்றாம் பரிசும் பெற்றனர். சண்டை  பிரிவில் 12 முதல் பரிசும்,15 இரண்டாம் பரிசும், 8 மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர். 
இரு பிரிவு போட்டிகளிலும் மொத்தம் 57 பரிசுகளை வென்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள், பயிற்சியாளர் நாடிமுத்து ஆகியோரை பட்டுக்கோட்டை நகரப் பிரமுகர்கள், பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
 

More from the section


பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் கருவூலம் நிரம்புகிறது: டி.ஆர்.பாலு பேச்சு

கொத்தடிமைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
எல்.ஐ.சி.-இல் "ஜீவன் சாந்தி' புதிய திட்டம் அறிமுகம்
கும்பகோணத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்