புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டிநீர் விநியோகத் தொட்டி திறப்பு

DIN | Published: 12th September 2018 08:20 AM

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2.57 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் குடிநீர் விநியோகத் தொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் திறந்து வைத்தார். 
இதில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன்,  சுதாகர்,  சோழபுரம் பேரூர் செயலாளர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் கோவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது கழுக்காணிவட்டத்தை சேர்ந்த பெண்கள் தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என எம்எல்ஏ அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

More from the section


பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் கருவூலம் நிரம்புகிறது: டி.ஆர்.பாலு பேச்சு

கொத்தடிமைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
எல்.ஐ.சி.-இல் "ஜீவன் சாந்தி' புதிய திட்டம் அறிமுகம்
கும்பகோணத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்