புதன்கிழமை 21 நவம்பர் 2018

கும்பகோணத்தில் 25 கிலோ கஞ்சா, 1,500 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN | Published: 12th September 2018 08:22 AM

கும்பகோணத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், ஒருவரை கைது செய்தனர்.
கும்பகோணம்  பாலக்கரை பகுதியில் கஞ்சா, மற்றும் வெளிமாநில மதுபானங்கள் பெருமளவில் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில்,  மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸார், பாலக்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் பாலக்கரை முனீஸ்வரன் கோயில் அருகில் நின்றிருந்த கல்யாணராமன் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கார்த்தி (31) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா, வெளிமாநில மதுபானங்களை விற்பவர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள், புதுச்சேரி மாநிலத்தின் 180 மிலி அளவு கொண்ட 1500 மதுபான பாட்டில்கள், 200 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, கார்த்தியை கைது செய்தனர்.

More from the section

தஞ்சை மாவட்டத்தில் மழை: மீட்புப் பணிகள் பாதிப்பு: மக்கள் தவிப்பு
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் வழங்கினார்


உரிய நிவாரணம் வழங்க தமாகா வலியுறுத்தல்

மின்சாரம் கிடைக்காததால் சாலை மறியல்
நிவாரண அறிவிப்பை மீண்டும் பரிசீலிக்க வலியுறுத்தல்