புதன்கிழமை 21 நவம்பர் 2018

திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்கு செப் 13-இல் விடிய விடிய தேனாபிஷேகம்

DIN | Published: 12th September 2018 08:15 AM

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்கு  செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. 
திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தேனாபிஷேக பெருமான் என்றழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை தொடங்கி விடிய விடிய தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம்  செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது.
அதன்படி, நிகழாண்டு விநாயகர் சதுர்த்தியன்று (செப். 13) மாலையில் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 14 ஆம் தேதி அதிகாலை வரை தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்புறம்பியத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

More from the section

சிலை கடத்தல் வழக்கு: ஜாமீன் மனு தள்ளுபடி
சரபோஜி கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு
மேலஉளூரில் விவசாயிகள் மறியல்
நாகை மாவட்டத்துக்கு  1000 உணவுப் பொட்டலங்கள் அனுப்பிவைப்பு
ஒரத்தநாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்