சனிக்கிழமை 17 நவம்பர் 2018

மகாகவி பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி

DIN | Published: 12th September 2018 08:19 AM

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வீராசாமி, துணை முதல்வர்கள் இரா. அறவாழி, ராஜராஜேஸ்வரி, வழக்குரைஞர் கோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா, பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு புலவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பேரவையின் பொதுச் செயலர் மு. செல்வராசு,  அமைப்புச் செயலர் எஸ். ராஜமாணிக்கம்,  துணைத் தலைவர் திருமலை,  இணைச் செயலர்கள் குமரேசன்,  தஞ்சை ராமதாசு, ஓய்வூதியர் சங்கத் தலைவர் இரா. ஜெகதீசன்,  செயலர் எஸ். ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

ஆதரவற்ற நிலையில் குழந்தை மீட்பு
மத்திய குழு விரைவாக வர வலியுறுத்தல்
கஜா புயல் சேத விவரங்கள் கணக்கெடுப்பு: தஞ்சை ஆட்சியர்
தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு
ஐப்பசி மாத கடைமுழுக்கு:காவிரியில் நீராடிய பக்தர்கள்