வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.1.35 லட்சம் திருட்டு

DIN | Published: 12th September 2018 08:21 AM

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள பூப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (33). தொழிலாளி. இவரது மனைவி கனகா கர்ப்பிணியாக உள்ளார். இவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவரது அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், கொலுசு, செல்லிடப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை பையில் வைத்து, தலையணைக்குக் கீழே கனகா திங்கள்கிழமை இரவு வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பார்த்தபோது பையைக் காணவில்லை. 
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்தனர். இதில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர் மருத்துவமனையில் உள்ள இரு கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடிவிட்டு, கனகா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பணப் பையைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

More from the section

திருபுவனத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தல்
திருபுவனத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-பேரணி
பேராவூரணி, பாபநாசத்தில் விஏஓ-க்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்


பேராவூரணியில்  பேரிடர் மேலாண்மை குழு கூட்டம்