செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

DIN | Published: 12th September 2018 08:20 AM

பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின்  ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சியில் அக்டோபர் 21ஆம் தேதி இந்த எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டு விளக்க பொதுக் கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கே.சேக்ஜலால் தலைமை வகித்தார். ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை,  செயலாளர் சாகுல்ஹமீது,  சமுதாய நலமன்ற செயலாளர் உமர்கத்தாப்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வி. வெங்கடாசலம்,  டி. மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் வி.எம்.எஸ்.நெல்லை முபாரக்,  மாநில செயலாளர் ஏ.அபுபக்கர் சித்திக்,  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜாஅலாவுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

More from the section

இடப்பிரச்னையால் கொத்தனார் வெட்டிக் கொலை
மாணவிக்கு பாலியல் தொல்லை:  சத்துணவு அமைப்பாளர் கைது


பேராவூரணியில் பேக்கரி உரிமையாளரை கடத்தி ரூ. 21 லட்சம் பறிப்பு


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்ற சிலம்பாட்டப் போட்டி

தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் தீவிபத்து