செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு கண்டனம்

DIN | Published: 12th September 2018 08:21 AM

முன்னறிவிப்பு இல்லாத தொடர் மின்வெட்டு செய்யப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தற்போது தொடர்ச்சியாக நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மின்வாரிய அலுவலர்களும் உடனே தலையிட்டு முன்னறிவிப்பு இல்லாமல் தடை செய்யப்படும் மின்சார பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

More from the section

இடப்பிரச்னையால் கொத்தனார் வெட்டிக் கொலை


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்ற சிலம்பாட்டப் போட்டி

மாணவிக்கு பாலியல் தொல்லை:  சத்துணவு அமைப்பாளர் கைது


பேராவூரணியில் பேக்கரி உரிமையாளரை கடத்தி ரூ. 21 லட்சம் பறிப்பு

தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் தீவிபத்து