கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்

கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வர்த்தக அணி சார்பில் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வர்த்தக அணி சார்பில் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு வர்த்தக அணி மாநிலச் செயலாளர் யூசுப்ராஜா தலைமை வகித்தார்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்து விலையேற்றத்தை தடுக்க வலியுறுத்தி ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.
தொடர்ந்து, பெட்ரோல் விலை உயர்வால் பாமர மக்களின் கஷ்டத்தை உணர்த்தும் விதமாக இருசக்கர வாகனங்களை தள்ளியபடி சென்றனர்.
இதையடுத்து, பெட்ரோல், டீசலின் கடும் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் ராசுதீன், மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com