தஞ்சாவூர்

பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்

DIN


கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். சனிக்கிழமை மாலை வரை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத என்னப்பன் உற்சவர் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல, கும்பகோணத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோயில்களில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பாபவிமோசன பெருமாள் கோயிலில்...
பாபநாசத்தில் உள்ள அருள்மிகு பாபவிமோசன பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பாபவிமோசன பெருமாள், பூமிதேவி, சீதேவி தாயார், உற்சவர் சீனிவாசப் பெருமாள், பங்கஜவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்த ஆஞ்சநேயர் கோயிலில்...
ஒரத்தநாடு அருகே அலிவலம் கிராமத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT