கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும்:  முத்தரையர்கள் வலியுறுத்தல்

கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, கூட்டத்துக்கு மாநில வழக்குரைஞர் பிரிவு அமைப்பாளர் சிவநேசன் தலைமை வகித்தார். நிறுவனர் கே.கே. செல்வகுமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: முத்தரையர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது, முத்தரையர் மக்களின் வாழ்வை மேம்படுத்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பாடநூல்களில் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு தனஞ்செய முத்தரையரின் பெயரை சூட்ட வேண்டும்.  
புதுகை மாணவி அபர்ணாவின் வன்புணர்வு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் மத்திய புலனாய்வுக் குழுவைக் கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில ஆலோசகர் விநாயகம்,  மாநில இளைஞர் அணிச் செயலாளர் வைரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com