"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'

மாணவர்கள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள நாளிதழ்களை படிப்பது அவசியம் என தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் தெரிவித்தார்.

மாணவர்கள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள நாளிதழ்களை படிப்பது அவசியம் என தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் தெரிவித்தார்.
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவர் ஆர். திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பி. கோபி வரவேற்றார்.
இதில் கல்லூரியில் பயின்ற 420 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் பேசியதாவது: 
மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். படிக்கும்போது வேலைக்கு செல்வதில் கவனம் சென்றால் படிப்பு சிதறி விடும். வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால்,  படிப்பை அந்த காலகட்டத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்.
மாணவர்கள் படித்துவிட்டு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். மேல்படிப்பா, வேலையா அல்லது சொந்த தொழிலா என்பதை முடிவு செய்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்தில் நூலகங்களுக்கு செல்வது அவசியம். அதேபோல, பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள நாளிதழ்களையும், நூல்களையும் படிப்பது அவசியம். 
இன்றைய காலம் போட்டி நிறைந்த உலகமாக இருப்பதால், அதற்கு ஏற்றவாறு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை பொறியியல் மாணவர்கள் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மாணவர்கள் எப்போதும் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். 
நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com