தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே பெரியார் சிலை அவமதிப்பு

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு அருகே பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து,  திங்கள்கிழமை திராவிடர் கழகத்தினர் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு வட்டம்,  காவரப்பட்டு கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே பெரியார் சிலை உள்ளது. திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் செருப்பை மாலையாக கட்டி பெரியார் சிலையின் கை பகுதியில் போட்டுள்ளனர்.
இதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் காவரப்பட்டில் ஒரத்தநாடு - மன்னார்குடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்,  அங்கிருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த அவர்கள்,  ஒரத்தநாட்டில் அண்ணா சிலை அருகே தி.க. மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திரண்டு,  ஹெச். ராஜாவின் தூண்டுதலின்பேரிலேயே பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறி, ஹெச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பளார் செங்கமலக்கண்ணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியலில்  திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் குணசேகரன்,  மாநில மாணவர் அணி செயலாளர் செந்தூர்பாண்டியன்,  மாவட்ட கழக செயலாளர் அருணகிரி,  ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் உத்திராபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பான புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

ராமதாஸ் கண்டனம்
பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கவராப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர தந்தை பெரியார் சிலையின் கைகளில் விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். அதே போன்று, திருச்சி சோமரசம்பேட்டையில் பெரியார் சிலையின் கைத்தடியை சிலர் உடைத்து வீசியுள்ளனர்.  இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT