தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, வியாழக்கிழமை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.18) தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இர. கவிஅரசு தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும், வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து தனியார், பொதுத் துறை நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து விதமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135பி-ன்படி, தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தேர்தல் நாளான வியாழக்கிழமை அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு விடுப்பு வழங்காத நேர்வில், தேர்தல் நாளன்று தொழிலாளர் உதவி ஆணையரை (அமலாக்கம்) 9442185099, உதவி ஆய்வாளர்களை 9487802380 (தஞ்சாவூர்), 9944097708 (கும்பகோணம்), 9943790152 (கும்பகோணம்) ஆகிய எண்களிலும், அலுவலகத் தொலைபேசியான 04362 - 264886 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம்.
எனவே, தொடர்புடைய அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், அனைத்து தொழிற் சங்கங்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து நிறுவன உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்து, நூறு சதவீத வாக்குப் பதிவு செய்து, ஜனநாயகம் தழைத்தோங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com