புனித வெள்ளி: பட்டுக்கோட்டையில் சிலுவைப்பாடு பேரணி

பட்டுக்கோட்டையில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடு பேரணி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 


பட்டுக்கோட்டையில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடு பேரணி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம்  மார்ச் 13ம் தேதி (புதன்கிழமை)  தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏப்.14 
(ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறு,  ஏப்.19 (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி நாள் அனுசரிக்கப்பட்டது. 
இதையொட்டி, பட்டுக்கோட்டையில் இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் சிலுவைப்பாடு பேரணி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பட்டுக்கோட்டை உலக ரட்சகர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட   பேரணியில்,  சிலுவையை சுமக்கும் இயேசுநாதரின் சொரூபம் ஊர்வலமாக வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. 
பேரணிக்கு பட்டுக்கோட்டை பங்குத்தந்தை எஸ்.ஜோசப் செல்வராஜ் அடிகளார் தலைமை வகித்தார். உதவி பங்குத் தந்தை ஏ. சார்லஸ் முன்னிலை வகித்தார். தஞ்சை ஆரோக்கியசாமி பேரணியை வழி நடத்தினார். 
பேரணியில், பட்டுக்கோட்டை நகரம் மற்றும் பங்குக்கு உள்பட்ட துணை கிராமங்களான அணக்காடு,  பண்ணைவயல், முதல்சேரி, கழுகப்புலிக்காடு, நடுவிக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் பாடலை பாடியபடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிலுவைப்பாடு பேரணி மீண்டும் பட்டுக்கோட்டை உலக ரட்சகர் தேவாலயம் சென்றதும் நிறைவடைந்தது. 
கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை பட்டுக்கோட்டை உலக ரட்சகர் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) கொண்டாடப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com